நிகழ்வு-செய்தி

கரகஹதென்ன மலை ஏறும் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படை மற்றும் ஆரோக்கியமான தேசத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் அதன் புதிய பரிமாணங்களில் ஒன்று கடற்படை வீரர்களை மலையேறுவதற்கு ஊக்குவிக்கிறது. இவ்வாறு, மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பணிப்பாளர் நாயகத்தின் பூரண மேற்பார்வையின் கீழ், கடற்படை மின் மற்றும் மின் பொறியியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் 2025 மார்ச் 29 அன்று கரகஹத்தன்ன மலை ஏறும் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

31 Mar 2025

சமுத்திரிகா ஆய்வுக் கப்பலின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கடற்படை மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் ஈடுபட்டனர்

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் (National Aquatic Resources Research and Development Agency - NARA) கடல் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ‘சமுத்திரிகா ‘ ஆராய்ச்சிக் கப்பலின் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் பராமரிப்பு தொடர்பாக 2025 மார்ச் 27 அன்று கடற்படைத் தலைமையகத்தில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையும் (NARA) இலங்கை கடற்படையும் இவ் புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் கையொப்பமிட்டனர்.

28 Mar 2025

2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கடற்படை மகளிர் ரக்பி அணியினர் கடற்படை தளபதியை சந்தித்தனர்

2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கடற்படை மகளிர் ரக்பி அணியினர்,வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 மார்ச் 25 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்து ரக்பி கோப்பையை கடற்படைத் தளபதி முன்னிலையில் முன்வைத்தனர். மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது தடவையாகவும் வெற்றியீட்டிய கடற்படை ரக்பி அணிக்கு கடற்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்தார்.

27 Mar 2025

இலங்கை கடற்படையின் ஆமை பாதுகாப்பு திட்டத்தினால் 42 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

இலங்கை கடற்படையின் ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட நாற்பத்திரண்டு (42) ஆமைக் குஞ்சுகள் 2025 மார்ச் 25 அன்று தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் பானம கடற்கரையில் கடலில் விடப்பட்டன.

27 Mar 2025

வட மத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகள் விரிவாக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்ட விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டது

வடமத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவன வளாகத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கட்டிடம் புனரமைக்கப்பட்டு விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டு 2025 மார்ச் 21 அன்று வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

27 Mar 2025

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கமாண்டர் Sean Jin மற்றும் அந்த அலுவலகத்தின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கமாண்டர் Ros Lary ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 மார்ச் 26 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.

27 Mar 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 மார்ச் 22 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின் இன்று 2025 மார்ச் 25 தீவில் இருந்து புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

26 Mar 2025

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, கொமடோ ரோஜர் வோட் (commodore Rodger ward) மற்றும் படையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று 2025 மார்ச் 22 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கு இணையாக, இந்தக் குழு இன்று (2025 மார்ச் 24) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தது.

24 Mar 2025

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையால் நடத்தப்படும் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைப்பெற்றது

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களிற்குள் நுழைதல், தேடல் மற்றும் கைப்பற்றும் உத்திகள் தொடர்பான பிராந்திய ஆலோசனை பாடநெறி மற்றும் பிராந்திய கடல்சார் சட்ட அமலாக்க ஆலோசனைப் பாடநெறி ஆகியவை திருகோணமலை சிறப்புப் படகுகள் படைப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றதுடன். சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வினை 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை Sober Island Resort இல் நடத்த கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

24 Mar 2025

சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன

இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் (02) மற்றும் முப்பத்தி நான்கு (34) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி அனுஷா பனாகொட அவர்களின் பங்கேற்புடன், 2025 மார்ச் 22 அன்று திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

23 Mar 2025