அமெரிக்க பாதுகாப்பு இணைப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கை அமெரிக்க துதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரொபர்ட் ரொஸ் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை பெப்ரவரி 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.
இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


