பாதுகாப்பு சேவைகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கடற்படை தளபதி அதிதியாக பங்கேற்பு
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் வித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டி இன்று (01) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்திற்கு போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானத்துறை பிரதி அமைச்சர் கௌரவ அசோக் அபேசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, விமானப்படை தளபதி எயர் மாஷல் ககன் புலத்சின்ஹள மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன ஆகியோர் உட்பட பல விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிட்கு வருகைதந்த அதிதிகள் பாடசாலை மாணவர்களினால் வரவேற்கப்பட்ட பின்னர் பாடசாலை அதிபரினால் விளையாட்டு மைதான மேடைக்கு அலைத்துச் செல்லப்பட்டனர். பாடசாலையின் மாணவர்களின் நிகழ்ச்சிகள் அவ்விழாவிட்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்தது. விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.
முப்படை மற்றும் போலிஸ் அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிட்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் வித்தியாலயத்தின் கட்டிட பணிகள் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இன்னும் நடைபெற்று வருகின்றது. இலங்கை கடற்படை இத்திட்ட கட்டுமான பணிகளுக்கு தேவையான ஆளணியை ழங்குவதுடன் தற்சமயம் 44 கடற்படை அங்கத்தவர்கள் இவ்வேலைகளின் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.











