ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் அதிமேதகு பிரயிஸ் ஹச்சன் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார். இச் சந்தர்பத்திற்கு ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு மதி உரைஞர் கெப்டென் ஜேசன் சியர்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.





