சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை கோனேஷ்வரம் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் மூன்று படகும் ‘கடற்படை தடாகத்தின் கடற்படை வீரர்களினால் நேற்று 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.மேலும் இவர்களுடன் மூன்று சோடி சுழி யோடும் காலணிகள் , 15 ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் அலங்கார மீன்கள் 63 கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.


