சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை நோர்வே தீவு கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களையும் ஒரு படகும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுடன் ஒரு சோடி சுழியோடும் காலணி , சட்டவிரோத வலையொன்றும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் திருகோணமலை துறை முக பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
