பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நாசிர் அஹ்மத் பட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 7) சந்தித்தார்.
இருவருக்குமிடையிலான சந்திப்போது பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பாகிஸ்தானிய உயர் ஸ்தாநிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மத் ராஜில் இர்ஷாத் கான் மற்றும் சிரேஷ்ட தலைமையக அதிகாரிகல் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.







