நிகழ்வு-செய்தி

கடற்படையினால் போல்பித்திகமையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக போல்பித்திகமை கொருவெவ மஹாநாம மஹா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரமொன்று அங்கு கற்கும் மாணவர்களின் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி நிறுவப்பட்டுள்ளது.

16 Sep 2016

சீன பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்திப்பு
 

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சிரேஷ்ட கர்னல் லி ஷேங்ளின் மற்றும் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் சாங், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 15) சந்தித்தனர்.

16 Sep 2016

கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு
 

சீன வுஹான் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கை நெறிகளை பின்பற்றி நாடுதிரும்பிய கடற்படை அதிகாரிகள் குழுவொன்றினால் கடற்படைக்கு 10 சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

15 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் விதுர வின் வீரர்களால் சாம்பூர் பிரதேச கடலில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் செப்டம்பர் 13ம் (2016) திகதி கைது செய்யப்பட்டார்கள்.

15 Sep 2016