மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் 05 வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (ஒக்டோபர் 10) மாலையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.
நெதர்லாந்து, நியூசிலாந்து, ரஷ்யா, சீனா, குவைத் மற்றும் உலகளாவிய கடல் குற்ற தடுப்பு திட்டம் தலைவர், மற்றும் குற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் உறுப்பினர் ஆகியோர் இவ்வாரு கடற்படை தளபதியை சந்தித்தனர். இச் சந்திப்பு காலி முகத் ஹோட்டலில் நடைபெற்றத்தாக குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜனரால் எப்,வீ வேன் ஸ்பேன்க், நியூசிலாந்து கடற்படையின் துணை கடற்படைத் தலைவர் கொமடோர் மெதிவு சி விலியம்ஸ், ரஷிய கடற்படை துணை தலைவர் ரியர் அட்மிரல் ஏ ஸ்டுகடுரோச், சீன கடற்படையின் கிழக்கு கடல் பகுதி கொடிவரிசை கட்டளைத் துனை தளபதி ரியர் அட்மிரல் சூய் யூஸ்ஹேன்ஸ், குவைத் கடற்படை நடவடிக்கைகள் பணிப்பாளர் பிகேடியர் வெலிட் அல் ஒபய்ட் மற்றும் உலகளாவிய கடல் குற்ற தடுப்பு திட்டம் தலைவர், மற்றும் குற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் உறுப்பினர் எலன் கோல் ஆகியோர் இவ்வாரு கடற்படை தளபதியை சந்தித்தனர்.
அங்கு, அவர்கள் இடையில் கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் நட்பை அதிகரித்தல் பற்றி மற்றும் கடல் பாதுகாப்பை நிறுவுவது உட்பட சில முக்கியமான கருத்துகள் பற்றி கலந்துரையாடப்பட்டத்துடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன