புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய கவுன்சில் ஜெனரல் வட கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட யாழ் மாவட்ட இந்திய கவுன்சில் ஜெனரல் எஸ் பாலசந்திரன் அவர்கள் நேற்று (ஜுன் 07) வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை வட கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.




