நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென 07 டிங்கியிழைப் படகுகள் மற்றும் 02 துரித மீட்பு படகுகள் அடங்கலாக 10 மீட்பு பணிக்குழுக்கள் இலங்கை கடற்படையினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.