மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 188 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 02) காலையில் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி 150 அடி நீளமான 09 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் 100 அடி நீளமான 179 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. நடவடிக்கைகள் மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.

இவ்வாரான சட்டவிரோத மீன்பிடி உபகரனங்கள் பயன்படுத்தி மேற்கொள்கின்ற மீன்பிடி நடவடிக்கைகளினால் இலங்கை கடற்பரப்பின் மீன் வளங்கள் அழிவுகின்ற காரணத்தினால் அந்த அழிவு செயல்களிருந்து மீன் வளங்களை பாதுகாக்க கடற்படை எப்போதும் அர்ப்பணிக்கப்படும்.