1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது
தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் ரத்கமை பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து ரத்கமை நகர பகுதியில் இன்று (மார்ச் 03) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது. குறித்த நபர்கள் கேரள கஞ்சா கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.
குறித்த சந்தேகநபர் மோதரை தொடன்தூவ பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 21 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் கேரள கஞ்சா கொண்டு செல்ல பயன்படுத்திய துவித்சக்கர வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக ரத்கமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






