நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 09) உதவியளித்துள்ளனர். இம்மீனவர் கடந்த மார்ச் 05 ஆம் திகதி ‘ரன் புதா’ எனும் மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது.
மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது. பவுல்துறைக்கு சுமார் 73 கடல் மைல் தொலைவில் இம்மீன்பிடி படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு மீட்பு பணிக்காக விரைந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட நபர் கரைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை சுற்றி உள்ள கடல் பயன்படுத்துகின்ற கடல்வழி மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு வருகிய்ற எந்தவொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்ற கடற்படை தனது பங்களிப்பை வழங்கியதுடன் எதிர்கால மீட்பு நடவடிக்கைகளுக்கும் இதேபோன்ற கவனம் செலுத்தப்படுகின்றது.








|