வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (மார்ச் 09) வலைபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1233 கிலோ கிராம் மீன்களுடன் இருவர் (02) கைதுசெய்யப்பட்டன.
குறித்த மீன் பொதி விற்பனைக்காக ஒரு கேப் வண்டியில் தயாராக இருக்கும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பொதி மற்றும் கேப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி, துனை மீன்வளத்துறை அதிகாரி அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.



