இலங்கையில் ரஷிய குடியரசின் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் ரஷிய குடியரசின் தூதுவரான கெளரவ யூரி பி மெதேரி அவர்கள் உட்பட குழுவினர் நேற்று (ஏப்ரல் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும் இன் நிகழ்வுக்காக நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ரஷிய கடற்படைக்குச் சொந்தமான "அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ" எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் மிகொலொச்சி க்ரோக்மல் அவர்கள் மற்றும் இலங்கையில் ரஷிய குடியரசு தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டெனிஸ் ஐ ஸ்கோடா உட்பட குழுவினர்களும் கழந்துகொன்டனர்.
அதே போன்ற கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள் நேற்று மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை சந்தித்துள்ளனர். இச் சந்திப்பில் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.














