ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 151 அஸகிரி " எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 04) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இன் நிகழ்வுக்காக இயக்குனர் கடற்படை செயல்பாடுகள் கொமடோர் சந்ஜிவ டயஸ் மற்றும் இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் உறுப்பினர்கள் கழந்துகொன்டனர்.
கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் யொசிநொரி சாடோ மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன அவர்களை சந்தித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அட்சுக்ஷிரோ மொரெரோ அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.
137 மீட்டர் நீளமான "டிடி- 151 அஸகிரி" கப்பலில் 150 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. மூன்று நாள் விஜயத்தை மேற்கொன்டு வந்தடைந்த இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன் படி விஜயத்தின் பின் (ஏப்ரல் 06) ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.
|
|















