‘டிடி- 151 அஸகிரி’ எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகளுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் 04) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 151 அஸகிரி " எனும் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யொசிநொரி சாடோ இன்று கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அட்சுக்ஷிரோ மொரெரோ அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.