சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு புத்தலம், தலுவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 57 வயதுடைய சிலாபம் பகுதியில் வசித்தவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு 03 டிங்கி படகு , 03 வெழி எரி இயந்திரங்கள், 03 ஜெனரேட்டர்கள் ஆகியவை மீனவர்களுடன் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்களும் அவர்களின் உடமைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழிலாளர் மீன்வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.