மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 110 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
கடற்படையினரினால் இன்று (மே 25) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 110 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

