சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரினால் கைது

2019 ஜூன் 05 ஆம் திகதி கடற்படையினரினால் முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த 16 பேர் கைது செய்யப்பட்டன. மேலும் 03 டிங்கி படகுகள், 03 வெழி எரி இயந்திரங்கள் மற்றும் பிடிக்கபட்ட மீன் 384 கிலோ கிராம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை இவ்வாரு கைது செய்யப்பட்டன.

கைது செய்துள்ள நபர்கள் மற்றும் மீன், டிங்கி படகுகள், வெழி எரி இயந்திரங்கள், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.