அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்பு
இன்று (27 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.
கொழும்பு துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மேற்கு கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவுக்கு இணைக்கப் பட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு சென்றனர். இதுக்காக துறைமுக காவல்துறையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர் . அதன் படி கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, நீரில் மிதக்கும் சிதைந்த உடலைக் கண்டுபிடித்ததுள்ளது. சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த பின்னர்,மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டது.
|
|






