புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை சங்கத்தின் ‘சிஹினய’ விடுமுறை விடுதி திறக்கப்பட்டது
கடற்படை சங்கத்தால் தியதலாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘சிஹினய’ விடுமுறை விடுதி 2019 நவம்பர் 6 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.
கடற்படை சங்கத்திக்கு தியதலாவ பகுதியில் ஒரு விடுமுறை விடுதியின் தேவை நீண்டகாலமாக இருந்தது. இந்த விடுமுறை விடுதி இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி தலைமையில் மற்றும் இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷெமால் பெர்னாண்டோ உட்பட செயற்குழுவின் உதவியுடன் கடற்படை சங்கத்தின் நிதி பங்களிப்புடன் கடற்படை பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் முழு உழைப்புடன் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த ‘சிஹினய’ விடுமுறை விடுதி திறப்பு நிகழ்விற்காக சங்கத் தேரர்கள், இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி, இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷெமால் பெர்னாண்டோ, கடற்படை இயக்குநர்கள், அதிகாரிகள் மற்றும் கடற்படை சங்க உறுப்பினர்கள் மற்றும் சில மாலுமிகள் கலந்து கொண்டனர்.
































