தெற்கு மாகாண சுகாதார இயக்குநர் உட்பட மருத்துவ அதிகாரிகள் தெற்கு கடற்படை கட்டளை மருத்துவமனைக்கு வருகை
தெற்கு மாகாண சுகாதார இயக்குநர் உட்பட மருத்துவ அதிகாரிகள் குழு 2020 ஜனவரி 31 அன்று பூச்ச கடற்படை தளத்தில் அமைந்துள்ள தெற்கு கடற்படை கட்டளை மருத்துவமனைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, இந்த விஜயத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பல் மருத்துவர்கள், கராபிட்டி போதனா மருத்துவமனை நிபுணர்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இணைக்கப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் அன்றாட வேலைகள் குறித்து மருத்துவமனை ஊழியர்களைத் தொடர்பு கொண்டு ஒரு ஆய்வு நடத்தினர்.
அவர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் ஒரு குழு புகைப்படத்திற்கும் கழந்து கொண்டுள்ளனர். மேலும் தெற்கு கடற்படை கட்டளை மருத்துவமனையில் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஆதரிக்கவும் ஒப்புக்கொண்டனர்.
|
|










