10 கிலோ கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 பிப்ரவரி 2 ஆம் திகதி தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அம்பலண்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 பிப்ரவரி 02, ஆம் திகதி தனமல்வில பகுதியில் மற்றொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒரு சந்தேக நபரை பரிசோதித்த போது அவரிடம் பெற்ற தகவலின் படி ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவைக் கட்ற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகநபர் எத்திலிவெவ பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக் கொச்லந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.






