கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் கடற்படை கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை நடத்தியது
நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை இன்று கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், கடற்படை பொது இடங்களில் பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் படி மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு பிரிவு (Chemical, Biological, Radiological and Nuclear) இன்று (2020 மார்ச் 24). கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் ஒரு கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகள் வழக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டன.
எதிர்காலத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொள்ளவும் கடற்படை தயாராகி வருகிறது.
|
|

























