கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த இரண்டாவது கடற்படை வீரர் முல்லேரியாவ வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் பின் அவர் குணமடைந்து 2020 மே 04 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

பொலன்னறுவை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதல் கடற்படை வீரருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த வெலிசர கடற்படைத் தளத்தில் ஒரு கடற்படை வீரர் 2020 ஏப்ரல் 23 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தபட்டார். அங்கு அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு சிகிச்சையில் இருந்தபோது மூன்று (3) பி.சி.ஆர் சோதனைகள் மூலம் அவர் பரிசோதிக்கப்பட்டார். அனைத்து சோதனை முடிவுகளும் நோயாளி கொரோனா வைரஸுக்கு எதிர்மறையானவர் என்பதை உறுதிப்படுத்தியதால், அவர் 2020 மே 04 அன்று வெளியேற்றப்பட்டார்.

மேலும், வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய இந்த கடற்படை வீரர் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். இந்த நபர் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.