கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்
கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 மே 04 அன்று ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் பேரழிவு நிலைமை நிலவிய போதிலும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் அம்பலாந்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து 400 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் கேரள கஞ்சா மற்றும் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்ட பெலியத்த மற்றும் ஹகுருவெல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை பொலிஸார் சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





