தனிமைப்படுத்தலை முடித்த 39 நபர்கள் பூஸ்ஸ மற்றும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ மற்றும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 39 நபர்கள் 2020 மே 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்பட்ட இந்த 39 நபர்களின், ஒரு (01) நபர் மே 4 ஆம் திகதியும் ஒன்பது (09) நபர்கள் 2020 மே 05 ஆம் திகதியும் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறினர், அதே நாளில் பத்து குடும்பங்களில் 29 நபர்களும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்.

ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வெளியேறும் நபர்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கும் தனிமைப்படுத்தல் சான்றிதழை, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினாலும் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வெளியேறும் நபர்களுக்கு வழங்கும் தனிமைப்படுத்தல் சான்றிதழை குறித்த முகாமின் கட்டளை அதிகாரியாலும் வழங்கப்பட்டன.

இங்கு முதல் குழுவாக, இந்த 29 நபர்களும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறினர், மேலும் 39 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 16 குழுக்களாக பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மொத்தம் 112 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் 62 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.