Southern Airduct (Pvt) Ltd நிறுவனம் மூலம் கடற்படைக்கு மின்விசிறிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன
Southern Airduct (Pvt) Ltd நிறுவனம் 2020 மே 04 அன்று பல மின்விசிறிகள் நன்கொடையாக கடற்படைக்கு வழங்கியது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், பணியாளர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் பல்வேறு நிறுவனங்களின் பொருள் உதவியுடன் கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடற்படை உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கும், முகாம்களுக்குள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் கடற்படை பராமரிக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் பயன்படுத்த இந்த மின்விசிறிகளை கடற்படைக்கு Southern Airduct (Pvt) Ltd நிருவனத்தால் வழங்கப்பட்டதுடன் குறித்த பொருட்கள் தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாட்டில் இத்தகைய பேரழிவு சூழ்நிலையை எதிர்கொள்ளும் கடற்படை பணியாளர்களின் நலனுக்காக இந்த நன்கொடை வழங்கியதற்காக கடற்படை சார்பில், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி Southern Airduct (Pvt) Ltd நிறுவனத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.



