காலி பகுதியில் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி பகுதியில் வக்வெல்ல, அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 ஜூன் 03 மற்றும் 05 ஆம் திகதிகளில் கடற்படையினரால் அகற்றப்பட்டன.
கடந்த சில நாட்களில் ஏற்பட்ட நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கின் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ், கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல அகலிய மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள், மரங்களின் கிளைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு நீர் சீராக ஓடுவதுக்காக மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் வெள்ள அச்சுறுத்தல்களைத் தடுக்க கடற்படை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வக்வெல்ல பாலம்
- அகலிய பாலம்
தொடங்கொடை பாலம்

















