அழகிய கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
தீவின் அழகிய கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கில், காலி முகத்திடம் கடற்கரை மையமாகக் கொண்டு இன்று (2020 ஜூன் 09) மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை கடற்படை மேற்கொண்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘நீல பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின்’ கீழ் தீவைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு இன்று (2020 ஜூன் 20) காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றுள்ளது.
இவ்வாரான திட்டங்கள் மூலம் எதிர்காலத்திலும், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளின் அழகை மேம்படுத்த கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
















