புதிய இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 24ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரால் விகும் லியனகே இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (ஜூன் 06, 2022) சந்தித்தார்.

இதன்படி, வருகை தந்த இராணுவத் தளபதியை கடற்படைத் தலைமையகத்தின் வாசலில் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்), ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும அன்புடன் வரவேற்றதுடன் கடற்படை மரபுகளுக்கு அமைவாக கௌரவ மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி துனை கடற்படைத் தளபதி உட்பட முகாமைத்துவ சபையை இராணுவத் தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.

லெப்டினன்ட் ஜெனரால் விகும் லியனகே 2022 ஜூன் 01 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 24 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படைத் தலைமையகத்திற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும். கடற்படைத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் பின்னர், கடற்படைத் தளபதி புதிய தளபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.