தனது பதவிக்காலம் நிறைவடைந்து வெளியேறவுள்ள இலங்கையின் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
.தனது பதவிக்காலம் நிறைவடைந்து வெளியேறவுள்ள இலங்கையின் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் கரு புகோரா (Captain Gaku FUKAURA) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்திய பின்னர், கடற்படைத் தளபதி தனது கடமை காலத்தின் போது ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் பங்கேற்ற இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட கப்டன் யுகி யோகோஹாரி (Captain Yuki YOKOHARI) கடற்படைத் தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறப்பட்டன.











