நிகழ்வு-செய்தி
மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்-கிளப் நிப்பான் ரக்பி லீக் கோப்பை கடற்படை வென்றது
மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்-கிளப் முதல் தர 2021/2022 நிப்பான் பெயிண்ட் ரக்பி கோப்பை கடற்படை ரக்பி அணிகள் வென்றன, மேலும் வெற்றி பெற்ற ரக்பி அணிகளின் தலைவர்கள் ரக்பி கோப்பை இன்று (செப்டம்பர் 21, 2022) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவிடம் வழங்கினார்கள்.
22 Sep 2022
‘சயுருசர’ வின் 45 வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 45வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் லெப்டினன்ட் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2022 செப்டம்பர் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் வழங்கப்பட்டது.
22 Sep 2022
இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் உள்ள இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் உள்ள நெதர்லாந்து அரச தூதரகத்தில் பணிபுரியும் கப்டன் ரொபேர்ட் வான் புரூன்ஸ்சன் (Captain Robert van Bruinssen) இன்று (2022 செப்டம்பர் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Sep 2022
மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த அரசாங்க வலைத்தளமாக கடற்படை வலைத்தளம் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது
‘LK Domain Registry’ நிருவனம் மூலம் நடத்தப்பட்ட 'BestWeb.lk 2022' போட்டித்தொடரில், பிரபலமான அரசாங்க இணையதளங்கள் வகையின் கீழ் தங்கப் பதக்கத்தையும், சிறந்த அரசாங்க வலைத்தளப் பிரிவின் கீழ் வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வென்றுள்ளது. அதற்காக கடற்படைக்கு வழங்கப்பட்ட விருதுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் வழங்கும் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்றது.
21 Sep 2022


