யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியில் கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க கல்லூரியின் கேட்போர் கூட கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாண ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மண்டை தீவில் உள்ள றோமன் கத்தோலிக்கக் கல்லூரிக்கு அத்தியாவசியமான இந்தக் கேட்போர் கூடக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் 2022 ஒக்டோபர் 18 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் தொழில்நுட்ப பங்களிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதற்காக யாழ்ப்பாணம், மண்டைதீவு சாந்த அந்தோணி தேவஸ்தானத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதன்படி, மூன்று (03) மாத குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், இந் நிகழ்வுக்காக மண்டைதீவில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார், கடற்படை கட்டளை அதிகாரி (தீவுகள்) கொமடோர் சிசிர திஸாநாயக்க, இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.









