நிகழ்வு-செய்தி

கடல்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் அமெரிக்காவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் இன்று (2023 மார்ச் 27) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக்கொண்டனர். அமெரிக்காவை பிரதிபலித்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அந்தோனி சி நெல்சன் அவர்களால் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவிடம் இந்த உபகரணங்களை அடையாளமாக கையளிக்கப்பட்டது.

28 Mar 2023

திருகோணமலை பகுதியில் சமூக கண் சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமொன்று கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது

திருகோணமலை மற்றும் ஹந்தல சிங்கம் கழகங்கள் இணைந்து 2023 மார்ச் 26 ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கண் சிகிச்சை மற்றும் தொற்றாத நோய் தடுப்பு திட்டத்துற்கு ஆதரவளிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

27 Mar 2023