இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் Colonel Paul Clayton மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள Colonel Darren Woods ஆகியோர் உத்தியோகபூர்வ பிரியாவிடை மற்றும் அறிமுக சந்திப்புக்காக இன்று (2023 ஜூன் 01), கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தனர்.