இலங்கை கடற்படையின் சமூக நலத் திட்டங்களின் கீழ், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று மையத்தின் இரத்தத் தேவையை நிரப்பும் நோக்கில் ஏற்பாடு செய்த இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 ஆகஸ்ட் 12 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான தலைமன்னார் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிறுவனத்தில் நடைபெற்றது.