இலங்கை முப்படை மருத்துவ நிபுனர் சங்கத்தின் பங்களிப்புடன் சுகாதார முகாமொன்று மற்றும் பல சமூக சேவை திட்டங்கள் சேருவாவிலவில் நடத்தப்பட்டன
இலங்கை முப்படை மருத்துவ நிபுனர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே லயன்ஸ் கழகம் மற்றும் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு ஆகியவை இணைந்து 2023 ஒக்டோபர் 08 ஆம் திகதி சேருவாவில மங்கள ரஜமஹா விஹாரயத்தில் சுகாதார முகாமொன்று மற்றும் பல சமூக சேவை திட்டங்கள் நடத்தினர்.
அதன்படி, சேருவாவில மங்கள ரஜமஹா விகாரையின் அதி வணக்கத்திற்குரிய அலுதேனியே சுபோத தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய பண்டாரவளை முதித தேரர் ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த சுகாதார முகாமில், வெளிநோயாளர் சிகிச்சை, சிறுவர் சிகிச்சை, கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, பொது மருத்துவ மனைகள், சத்திரசிகிச்சைகள், பல் மருத்துவ மனைகள், தொண்டை/காது/மூக்கு கிளினிக்குகள், தோல் நோய் கிளினிக்குகள் மற்றும் உளவியல் ஆலோசனை கிளினிக்குகள் உட்பட நடமாடும் ஆய்வகங்கள் மூலம் இரத்த பரிசோதனை வசதிகள் மற்றும் நிதி ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை சேவைகளும் நடத்தப்பட்டன, மேலும் இப்பகுதியில் உள்ள 25 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவும், 50 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நீலபொல கல்லூரி மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றதுடன், இதன்போது கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் த சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ரியர் அட்மிரல் ஜனக மாரம்பே, திணைக்களத் தலைவர்கள், கட்டளை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், கடற்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவ திணைக்கள உறுப்பினர்கள், முப்படை மருத்துவ நிபுனர் சங்கத்தின் தளபதி உட்பட உறுப்பினர்கள், திருகோணமலை பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தலைமையில் சுகாதார திணைக்களம் உறுப்பினர்கள், லயன்ஸ் கழகம் உறுப்பினர்கள், இலங்கை கெயார்ஸ் நிறுவன உறுப்பினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



















