நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2023 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2023 நவம்பர் 16 ஆம் திகதி மற்றும் இன்று (2023 நவம்பர் 17) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.

17 Nov 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KORA’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 நவம்பர் 16 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Kora’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 நவம்பர் 17) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

17 Nov 2023