நிகழ்வு-செய்தி
73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசீர்வதிக்கும் வகையில் ஸ்ரீ தலதா மாலிகையில் புத்த பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது
 
           இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் வகையில் பல சர்வமத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த சமய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கிலன்பச புத்த பூஜை வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 08 ஆம் திகதியும் அன்னதானம் வழங்கும் சமயச் சடங்குகள் இன்றும் (2023 டிசம்பர் 08) இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவர் திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
09 Dec 2023
இலங்கை கடற்படை தனது 73வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது
 
           பெருமைமிக்க வரலாற்றில் மரபுரிமை பெற்ற இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (09 டிசம்பர் 2023) பெருமையுடன் கொண்டாடப்படுவதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் 73வது ஆண்டு நிறைவு விழா கடற்படை மரபுகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் நடைபெறுகிறது.
09 Dec 2023


