கொமடோர் சனத் பிடிகல கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கொமடோர் சனத் பிடிகல இன்று (2024 ஏப்ரல் 02) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடற்படை காலாட்படை தளபதி அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்க முன்னர், கொமடோர் சனத் பிடிகல கடற்படை பணிப்பாளர் மரையின் பதவியில் கடமையாற்றினார்.

இதன்படி, கடற்படை காலாட்படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிசிர திஸாநாயக்க, கடற்படை காலாட்படையின் பதில் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கொமடோர் சனத் பிடிகலவிடம் அந்தப் பதவிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் கையளித்தார்.