இத்தாலிய கடற்படையின் ‘PPA MONTECUCCOLI’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இத்தாலிய கடற்படையின் 'PPA MONTECUCCOLI' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 அக்டோபர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கடற்படை மரபுப்படி குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Multi Purpose Combat Ship வகையின் 'PPA MONTECUCCOLI' போர்க்கப்பல் நூற்று நாற்பத்தி மூன்று (143) மீற்றர் நீளம் கொண்டுள்ளதுடன் நூற்றி ஐம்பத்திரண்டு (152) கடற்படையினர்களையும் கொண்டது. கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் Alessandro Troia மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (2024 ஒக்டோபர் 10,) கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், 'PPA MONTECUCCOLI' என்ற போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் முழு கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளனர், இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாடுகள் குறித்த விளக்கமளிப்பு செயலமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு கடற்படைக் கட்டளைக் கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடனான பயிற்சிக்குப் (PASSEX) பின்னர், 'PPA MONTECUCCOLI' என்ற போர்க்கப்பல் 2024 ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டுப் புறப்பட உள்ளது.


