நிகழ்வு-செய்தி
அடிப்படை நோக்குநிலைப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 13 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு
 
           அடிப்படை நோக்குநிலை பாடநெறியை (மருத்துவம்) 02/2024 வெற்றிகரமாக முடித்த பதின்மூன்று (13) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2024 அக்டோபர் 11) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் (NMA) பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
11 Oct 2024
இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 
           இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகரான கப்டன் Robert van Bruinessen இன்று (2024 அக்டோபர் 11) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
11 Oct 2024
பிரெஞ்சு கடற்படை ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 
           இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் இலங்கையின் பிரெஞ்சு கடற்படை ஆலோசகராக பணியாற்றும் கமாண்டர் Dang Khoa BUI, இன்று (2024 அக்டோபர் 11,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
11 Oct 2024
பயிற்சி பாய்மரப் போர்க்கப்பலான 'PO LANG' அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது
 
           உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 அக்டோபர் 08 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பாய்மரப் போர்க்கப்பலான (Chinese People’s Liberation Army Navy Sail Training Warship) ‘PO LANG’ உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (அக்டோபர் 11, 2024) இலங்கையில் இருந்து புறப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளை பின்பற்றி புறப்பட்ட கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.
11 Oct 2024
ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
 
           இலங்கை கடற்படையில் 35 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க இன்று (2024 அக்டோபர் 11) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
11 Oct 2024
ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷ பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்
 
           ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷ இன்று (11 அக்டோபர் 2024) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அலுவலகத்தில் கடற்படையின் பணிப்பாளர் பொறியாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
11 Oct 2024


