நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை முடித்த 1732 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று (2024 அக்டோபர் 14) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இரண்டாவது அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

14 Oct 2024

கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் இன்று (2024 ஒக்டோபர் 14) வழங்கப்பட்டது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைமை அதிகாரிக்கு தனது வாழ்த்துகளையும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

14 Oct 2024