நிகழ்வு-செய்தி
இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் (Higher Defence Management Course India) மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட Colonel Kedar D Gupte தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 அக்டோபர் 15) கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்தனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்த குழுவினரை கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.
15 Oct 2024
இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில்
ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024) இன்று (2024 அக்டோபர் 15) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஆரம்பமானது.
15 Oct 2024
கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் பயிற்சியின் இறுதி உரை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல் விதுர மரைன் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
15 Oct 2024


