ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கப்பட்டது
யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் ஐ.டி.என் திலக்குமாரவுக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு 2024 நவம்பர் 10 ஆம் திகதி கண்டி வத்தேகமவில் உள்ள குறித்த மாலுமியின் இல்லத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மற்றும் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
ஓய்வுபெற்ற மாலுமியான ஐ.டி.என் திலக்குமார அவரது ஊனமுற்ற நிலையின் நிவாரணத்திற்காக சக்கர நாற்காலியைப் பெற்றுத் தருமாறு கடற்படை நலன்புரித் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, கடற்படை சமூக பணி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில் ஓய்வு பெற்ற இளைய மாலுமிக்கு இந்த சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.


