அகில இலங்கை வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரில் பரிசுகளுக்காக கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் அனுசரணை வழங்குகிறது

போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை வலுவூட்டல் என்ற உன்னதமான கருப்பொருளை மனதில் கொண்டு, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்காக வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரொன்று 2024 நவம்பர் மாத்த்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த போட்டித்தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கும் கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் 2024 நவம்பர் 11 ஆம் திகதி நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து அடையாள ரீதியாக பரிசுகளை கையளித்தனர்.

போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை வலுவூட்டும் வகையில், நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான செயலணியின் தலைமையில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தேசிய அபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு சபை, கொழும்பு அமைப்பு மற்றும் டயலொக் ஆசியாட்டா பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரை ஏற்பாடு செய்கிறது.

இந்தப் போட்டித்தொடரில் சித்திரப் போட்டி 6 ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு பிரிவுகளாகவும், நேரடி காணொளிப் போட்டி 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 19 முதல் 30 வயது வரை என இரு பிரிவுகளாக நடைபெறும். அதன் படி இந்த சித்திரப் மற்றும் நேரடி காணொளிப் போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசுகள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும், அதே நேரத்தில் நேரடி காணொளிப் போட்டியின் இரண்டாவது பிரிவில் 19 முதல் 30 வயது வரையிலான வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க கையடக்க தொலைபேசிகள் வழங்கப்படும்.