இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் பரமேஷ் சிவமணி (DG Paramesh Sivamani, PTM, TM) இன்று (2024 நவம்பர் 11) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகத்தை கடற்படைத் தளபதி கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இரு தரப்புக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும், இந் நிகழ்விற்காக இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர், நாயகம் ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் (Captain Anand Mukundan) ஆகியோரும் கலந்துகொண்டனர்.


